வீட்டு அறைகளின் அமைப்பு


1.சமையலறை :
                    தென் கிழக்கு  மூலையான  அக்னி  முலையில்  தான்  சமையலறை அமையவேண்டும . அடுப்பு  மேற்கைப் பார்க்கவேண்டும். சமையல் செய்பவர் முகம் கிழக்கு திசையாக இறுக்க வேண்டும் .
                     எந்த நிலையிலும் ஈசானியத்தில்  அடுப்பை  அமைக்க  கூடாது . அவ்வாறு அமைத்தால் பொன் விறகைப் போல எரிந்து, ஆவீட்டிலேயே ண்கள் உபயோகமற்றவர்களாகி விடுவார்கள் .

2.படுக்கை  அறை :
                     படுக்கை அறைகள் ஆக்கினேயம், வாயவியம், ஈசானியத்தில்  அமைத்து கொள்ளலாம். பெரியவர்கள் நைருதியை உபயோகிக்கலாம். ஈசானிய அறையில் தம்பதிகள் படுக்க கூடாது. வடக்கு அறையில் படுக்கை இருக்கக்கூடாது. இருந்தால் நஷ்டம் உண்டாகும்.

3.கப் போர்ட்:
                     கிழக்கு சுவரில் தெற்கில் ஆரம்பித்து வடக்கு சுவருக்கு முழுமையாக அமைக்கலாம், தெற்குபுரம் ஆக்கிநேயத்தில் விடக்கூடாது. ஈசானிய அறையில் கிழக்கு வடக்கு சுவர்களில் எம்முறையிலும் அமைக்கக்கூடாது.

4.குளியலறை:
                      வீட்டிலேயே குளியலறை ஏற்பாடு செய்து கொள்பவர்கள் வீட்டின் கிழக்கு அல்லது வடக்கு அறைகளில் அமைப்பது நலம். நைருதி படுக்கை அறைக்கு பாத்ரூம் ஆனால், படுக்கை அறைக்கு கிழக்கோவடக்கோ அமைக்கலாம்.வாயவிய படுக்கை அறைக்கு தெற்கிலும், ஆக்கிநேயதிற்கு என்றால் மேற்கில் உண்டாக்க வேண்டும்.

No comments: