இயற்கையின் பலனை பெற்றுத்தரும் வாஸ்து


மருத்துவ விஞ்ஞானபடி நமது உடலே காந்த மயமானது. இப்படி கணக்கிடும்போது தலை வடதுருவமாகவும், பாதம் தென்துருவமாகவும் விளங்குகிறது. ஒரே துருவம் ஒன்றையொன்று விலக்கும், எதிர் துருவங்கள் ஒன்றையொன்று ஈர்க்கும் என்பது விஞ்ஞானம் (SAME POLES REPEAL & OPPOSITE POLES ATTRACT ). எனவேதான் வடக்கே தலை வைத்து படுத்தால் உடல் நலமும் மனநலமும் பாதிக்கும் என்று கூறுகிறார்கள்.                          
நமது நாட்டின் ஈசான்ய பாகம்(NE) சற்று தாழ்ந்தும், தென்மேற்கு பாகம்(SW) சற்று உயர்ந்தும் இருக்கிறது. எனவே நமது வீட்டினை அமைக்கும் போது ஈசானிய மூலை பள்ளமாகவோ அல்லது தாழ்வாகவோ இருக்கவேண்டும். தென்மேற்கு பாகம் உயரமாகவும் கனமானதாகவும் இருக்க வேண்டும் என்று வாஸ்து கூறுகிறது.
கதிரவனின்(SUN) கதிரில் அனைத்து ஜீவ சக்திகளும் நிரம்பியுள்ளன. அனைத்து ஜீவராசிகளும் சூரிய ஒளியினால் தான்  உயிர்வாழ்கின்றன. காலையில் சூரியனிடமிருந்து வரும் கதிரில் ஆக்க சக்திகள் அதிகம் நிரம்பியுள்ளன. எனவே தான் காலை வேளையில் சூரியக்கதிர்கள் வீட்டின் உள்ளே அதிக நேரம் படும்படி வாயில்களையும் ஜன்னல்களையும் அமைக்கவேண்டும்.
 மாலை வெயிலில் ஆக்க சக்திகள் குறைவு. அவை உடலுக்கு தீமைபயப்பவை. இதனாலேயே மேற்கிலும், தெற்கிலும் குறைந்த அளவு ஜன்னல்களும், வாயில்களும் அமைத்து, தீய கதிர்களை தடுத்து கொள்ள வேண்டும் என வாஸ்து கூறுகிறது.

No comments: